தேன்கனிக்கோட்டையில் பரபரப்பு:ஆசிரியர் வீட்டின் காம்பவுண்டு சுவரில் சிக்கிய 23 பாம்புகள்


தேன்கனிக்கோட்டையில் பரபரப்பு:ஆசிரியர் வீட்டின் காம்பவுண்டு சுவரில் சிக்கிய 23 பாம்புகள்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 PM IST (Updated: 6 Jun 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை மேல்கோட்டை விஜய நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் காம்பவுண்டு சுவரில் உள்ள துளையில் நாகப்பாம்பு புகுந்தது. இதை பார்த்து ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் பாம்பு பிடிக்கும் தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்த வாட்ச் முபாரக் (வயது 38), புல்லட் முபாரக் (34), சையத் முஜாமில் (30) ஆகியோருடன் சென்று பாம்பை பிடித்தனர். அந்த துளையில் மேலும் 22 பாம்பு குட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் நாகப்பாம்பு மற்றும் குட்டிகளை பிடித்தனர். அப்போது ஒரு பாம்பு குட்டி வாட்ச் முபாரக்கை கடித்தது.

இதில் மயக்கமடைந்த அவரை வனத்துறையினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வனத்துறையினர் பாம்பு மற்றும் குட்டிகளை மரகட்டா வனப்பகுதியில் விட்டனர். ஒரே இடத்தில் நாகப்பாம்பு மற்றும் 22 குட்டிகள் இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story