குளத்தில் நடனமாடிய பாம்புகள்


குளத்தில் நடனமாடிய பாம்புகள்
x

வேடசந்தூர் அருகே குளத்தில் பாம்புகள் நடனமாடின.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே மரியமங்களபுரத்தில் உள்ள இலந்தைகுளத்தில் நேற்று மாலை 2 சாரை பாம்புகள் பின்னிப்பிணைந்து நடனமாடிக்கொண்டிருந்தன. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்தனர். மேலும் இதுகுறித்து மரியமங்களபுரம் கிராம மக்களுக்கும் தகவல் பரவியது.

இதையடுத்து கிராம மக்களும் குளத்துக்கு வந்து பாம்புகள் நடனமாடிய காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும் சிலர் தங்களது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர். சுமார் 2 மணி நேரம் நடனமாடிய பாம்புகள், அதன்பிறகு அங்கிருந்து முட்புதருக்குள் சென்றன.


Next Story