கோவில் கிணற்று தண்ணீருக்குள் பின்னிப்பிணைந்த பாம்புகள்


கோவில் கிணற்று தண்ணீருக்குள் பின்னிப்பிணைந்த பாம்புகள்
x

திண்டுக்கல் அருகே, கோவில் கிணற்று தண்ணீருக்குள் 2 பாம்புகள் பின்னிப்பிணைந்தபடி நடனமாடிய காட்சியால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

திண்டுக்கல்

கோவில் கிணறு

திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே கோவிலுக்கு சொந்தமான கிணறு உள்ளது. 40 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 30 அடி தண்ணீர் இருக்கிறது.

ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவு வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

அப்போது, கோவில் கிணற்றின் மேல் பகுதியில் 4 பாம்புகள் சுற்றியபடி இருந்தது. அதில் சுமார் 7 அடி நீளமுள்ள நல்லபாம்பு, சாரைப்பாம்பு ஆகியவை திடீரென கிணற்றுக்குள் தாவி குதித்தது.

பக்தர்கள் பரவசம்

பின்னர் தண்ணீருக்குள் மிதந்தபடியே பின்னிப்பிணைந்து நடனமாடின. சுமார் 3 மணிநேரமாக நடந்த நடன காட்சியை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். சில பக்தர்கள் கிணற்று மேட்டில் தேங்காய் உடைத்தும், சூடம் ஏற்றியும் மனதுருக வழிபட்டனர்.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விமரிசையாக திருவிழா நடைபெறும். அப்போது இந்த கிணற்றில் தான் கரகம் ஜோடித்து தெய்வ வழிபாடு செய்வோம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற நிகழ்வு எங்கள் ஊரில் நடந்தது. அதன்பிறகு தற்போது தான் இந்த அரிய காட்சியை எங்களால் காணமுடிந்தது என்றனர்.


Next Story