கஞ்சா கடத்தலை தடுக்க மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை


கஞ்சா கடத்தலை தடுக்க மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை
x

சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்க மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சேலம்

சூரமங்கலம்

சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்க மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் விற்பனை

ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து சாலை மார்க்கமாக தமிழகத்தில் கஞ்சா கடத்தி வருவதை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து கடத்தல்காரர்கள் ரெயில்களில் கஞ்சாவை கடத்தி வருகிறார்கள். போலீசாரிடம் பிடிபட்ட கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் இருந்து கஞ்சா வாங்குவதற்காக ஒடிசா, ஆந்திரா மாநிலங்களுக்கு இளைஞர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் மூலம் கஞ்சாவை ெரயிலில் கடத்தி வந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது, மேலும் ஆந்திராவில் ரூ.5 ஆயிரத்துக்கு வாங்கும் கஞ்சாவை சுமார் ரூ.50 ஆயிரம் வரை விற்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அதிரடி சோதனை

கஞ்சாவை ெரயில்களில் கடத்தும் இளைஞர்களை பிடிக்கும் வகையில் முதல் முறையாக சேலம் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் ஆகாஷ் என்ற மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிரடியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆந்திரா, ஒடிசாவில் இருந்து கேரளா செல்லும் ெரயில்களில் சோதனை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து சேலம் ரெயில்வே போலீசார் கூறுகையில், ெரயிலில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில், கஞ்சா வாசனையை கண்டறியும் ஆகாஷ் என்ற மோப்பநாய் உதவியுடன் ெரயில்களில் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு முதல் முறையாக சேலம் ரெயில்வே போலீசார் இந்த சோதனையை மேற்கொள்கிறோம்., மோப்பநாய் சோதனையில் கடத்தல்காரர்கள் அதிகளவில் சிக்குவார்கள் என்று தெரிவித்தனர்.


Next Story