டி.என்.பாளையம், கோபியில் கடும் மூடுபனி


டி.என்.பாளையம், கோபியில் கடும் மூடுபனி
x

டி.என்.பாளையம், கோபியில் கடும் மூடுபனி

ஈரோடு


டி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான டி.ஜி.புதுார், ஏழுர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், பெருமுகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மிதமான மழை பெய்தது.

இதனையடுத்து நேற்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது, அதிகாலை முதல் காலை 8.30 மணி வரை மூடுபனி சூழ்ந்தது. இதனால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகன ஓட்டிகள் சென்றார்கள்.

கோபி பகுதியில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் அதிக அளவில் பனி சூழ்ந்துவிடுகிறது. காலை 9 மணி வரை பனி விலகுவதில்லை. நேற்று காலை கோபி-சத்தி ரோட்டில் மூடுபனி சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டார்கள்.


Next Story