முத்தூரில் பனிப்பொழிவால் இளநீர் விற்பனையும், விலையும் சரிந்து உள்ளது.


முத்தூரில் பனிப்பொழிவால் இளநீர் விற்பனையும், விலையும் சரிந்து உள்ளது.
x

முத்தூரில் பனிப்பொழிவால் இளநீர் விற்பனையும், விலையும் சரிந்து உள்ளது.

திருப்பூர்

முத்தூர்

முத்தூரில் பனிப்பொழிவால் இளநீர் விற்பனையும், விலையும் சரிந்து உள்ளது.

குளிர்கால சீதோஷணம்

திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகரம், சின்னமுத்தூர், ஊடையம், மங்களப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் இளநீர் விலையும், விற்பனையும் சரிந்து உள்ளது.

இதுபற்றி இளநீர் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

இப்பகுதிகளில் பொதுவாக ஆண்டு முழுவதும் பகல் நேரங்களில் இளநீர் விற்பனை இருந்து கொண்டே இருக்கும். இதில் கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் இளநீர் விற்பனை நன்கு சூடு பிடித்து விறுவிறுப்பாக விற்பனை ஆகும். இதன்படி கோடை காலத்தில் சுமார் 5 மாதங்களுக்கு மேல் ஒரு இளநீரின் விலை ரூ.50 முதல் ரூ.60 வரை உயர்த்தி விற்பனை செய்யப்படும்.

இந்த நிலையில் இப்பகுதிகளில் கடந்த 3 வார காலமாக பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக இளநீர் விற்பனை வெகுவாக சரிந்து உள்ளது. அதாவது ஒரு சாதாரண இளநீர் ரூ.20-க்கும், செவ்விளநீர் ரூ.30-க்கும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவால் இப்பகுதிகளில் தற்போது இளநீர் விலையை குறைத்து விற்பனை செய்தாலும் இளநீர் விற்பனை மந்தமாகவே உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக விவசாயிகளின் ஏராளமான தென்னை மரங்கள் நீரின்றி காய்ந்து விட்டன. இதில் உயிர் பிழைத்து உள்ள தென்னை மரங்கள் மற்றும் புதிய தென்னை மரங்களில் இருந்தும் தற்போது இளநீர் வெட்டி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தேங்காய் பருப்பு விலை

மேலும் இப்பகுதிகளில் கடந்த 6 மாத காலமாக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் வெளி வியாபார கடைகளில் ஒரு கிலோ தேங்காய் ரூ.22 முதல் ரூ.28 வரையிலும், தேங்காய் பருப்பு விலை ரூ.75 முதல் ரூ.85 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது. ஆனால் அதே கால கட்டமான தற்போதைய டிசம்பர் மாத சூழ்நிலையில் பனிப்பொழிவால் இளநீர் விலையும், விற்பனையும் கடுமையாக சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மீண்டும் இளநீர் விலை உயர்வதற்கு பனிப்பொழிவு காலம் நிறைவு பெற வேண்டும். அதன்பின்பு மார்ச் மாத இறுதியில் மீண்டும் கோடை காலம் தொடங்கியவுடன் இளநீர் விலை சற்று உயர்த்தப்பட்டு விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story