பனிப்பொழிவு


பனிப்பொழிவு
x

பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கீரனூர், திருவரங்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக அதிகாலை முதல் காலை 8 மணி வரை அதிக அளவில் பனி பெய்து வருகிறது. காலை நேரத்தில் மூடு பனி அதிகமாக இருந்ததால் சாலைகளில் வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதனால் பஸ்கள் வழக்கமான நேரத்திற்கு செல்ல முடியாமல் சற்று தாமதமாகவே சென்றனர். அதே போல பொதுமக்களும் இயல்புவாழ்க்கை பாதித்து அன்றாட காலை வேலைகளை செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.


Next Story