ஆரணியில் பனிப்பொழிவு


ஆரணியில் பனிப்பொழிவு
x

ஆரணியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி நகரிலும், சுற்று வட்டார பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை மார்கழி மாதம் பொழியக்கூடிய பனியை போல பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.

இதனால் வேலூரில் இருந்து ஆரணி வரக்கூடிய இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், இதேபோல ஆரணியில் இருந்து ஆற்காடு, ஆரணியில் இருந்து திருவண்ணாமலை செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் முகப்பு வெளிச்சத்துடன் செல்லக்கூடிய சூழ்நிலை இருந்தது.

மேலும் பனிபொழிவால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதேபோல் கீழ்பென்னாத்தூரில் இன்று அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை பனிபொழிவு காணப்பட்டது. இதனால் சாலைகளில் எதிரில் வருபவர்கள் யாரென தெரியாமல் இருந்தது. வாகனங்கள் மெதுவாக சென்றன.


Related Tags :
Next Story