தமிழகத்தில் இதுவரை 1.56 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி
1.56 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2811 மின் வாரிய அலுவலகங்களில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1.56 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி, 29.12.2022 அன்று வரை, 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 2.27 லட்சமும், ஆன்லைன் மூலம் 1.39 லட்சம் இணைக்கப்பட்டது. இன்று வரை மொத்தம் 1.56 கோடி இணைக்கப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story