தூத்துக்குடியில் இதுவரை 218 பேர் குண்டர் சட்டத்தில் கைது


தூத்துக்குடியில் இதுவரை 218 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இதுவரை 218 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 218 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கொலை வழக்கு

சூரங்குடி வடக்கு செவல் பகுதியை சேர்ந்த காசிராமன் மகன் ராமநாதன் (வயது 38) என்பவர், சகோதரரை கொலை செய்த வழக்கில் சூரங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதே போன்று கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த காந்தாரிமுத்து மகன் மந்திரமூர்த்தி (28) என்பவரை கொலை முயற்சி வழக்கில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டம்

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ராமநாதன், மந்திரமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உட்பட 218 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story