கூடங்குளம் முதல் அணுஉலையில் இதுவரை 43 ஆயிரத்து 514 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி


கூடங்குளம் முதல் அணுஉலையில் இதுவரை 43 ஆயிரத்து 514 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி
x

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலையின் மூலம் இது வரை 43 ஆயிரத்து 514 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலையின் மூலம் இது வரை 43 ஆயிரத்து 514 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

முதலாவது அணுஉலை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் பிரேம்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளம் முதலாவது அணு உலையில் கடந்த 24-ந் தேதி முதல், எரிபொருள் நிரப்பும் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 326 நாட்களாக முதலாவது அணு உலை தொடர்ந்து இயங்கி 7,614 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக 65 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பராமரிப்பு பணி

எரிபொருள் நிரப்பும் பணி நடந்து கொண்டிருக்கும் போதே பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்பு மின் உற்பத்தி தொடங்கப்பட்டு கிடைக்கின்ற ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படும்.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது அணு உலை இந்தியாவில் உள்ள 21-வது அணு உலை ஆகும். கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகள் மூன்றாம் தலைமுறைக்கான பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ள அணு உலை ஆகும்.

இதுவரை மின்உற்பத்தி

கூடங்குளம் முதலாவது அணு உலையில் இருந்து இதுவரை 43 ஆயிரத்து 514 மில்லியன் யூனிட் மின்சாரமும், இரண்டாவது அணு உலையில் இருந்து இதுவரை 29 ஆயிரத்து 192 மில்லியன் யூனிட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story