உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இதுவரை 7 பேர் வேட்பு மனு தாக்கல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இதுவரை 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதுவரை 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
வேட்புமனு
தூத்துக்குடி மாவட்டத்தில் 30.4.2022 வரை ஏற்பட்ட காலியிடங்களான ஒரு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 3 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் 23 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி ஆகியவற்றுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இதுவரை 3 பேரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை 4 பேரும் ஆக மொத்தம் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். யனியன் வார்டுக்கு இதுவரை ஒருவரும் மனு தாக்கல் செய்யவில்லை. வருகிற 27-ந் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.
பரிசீலனை
வருகிற 28-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. தொடர்ந்து 30-ந் தேதி மதியம் 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் அளிக்கப்படுகிறது. அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். போட்டி இருந்தால், அடுத்த மாதம் 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடத்தப்படும். இதில் பதிவான வாக்குகள் 12.07.2022 அன்று காலை 8 மணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைத்து எண்ணப்படுகின்றன