இதுவரை 77 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 77 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சி பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுபடுகையில் 10 மூடை ஆற்று மணல் திருடிய வழக்கில் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த இசக்கி மகன் கண்ணன் எனற கருப்பசாமி (வயது 27) என்பவரை ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கண்ணனை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் உட்பட 77 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.