தட்டப்பாறை ஊராட்சி மன்ற தேர்தலில் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை


தட்டப்பாறை ஊராட்சி மன்ற தேர்தலில் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை
x

தட்டப்பாறை ஊராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டும் இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

வேலூர்

குடியாத்தம்

தட்டப்பாறை ஊராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டும் இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பதவி எஸ்.டி.பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தட்டப்பாறை ஊராட்சியில் எஸ்.டி. பிரிவினர் யாரும் வசிக்கவில்லை என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தட்டப்பாறை ஊராட்சிக்கு எஸ்.டி.பெண்கள் பிரிவில் ஒரே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவிலும் சாதி சான்று சரியானபடி இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தநிலையில் தட்டப்பாறை ஊராட்சிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மீண்டும் எஸ்.டி.பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. தேர்தலுக்கு 27-ந் தேதி (நாளை) வரை வேட்பு மனு தாக்கல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று மாலை வரை ஒருவரும் மனுதாக்கல் செய்யவில்லை.

இதனிடையே தட்டப்பாறை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலரும், தட்டப்பாறை ஊராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான எம்.கார்த்திகேயன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.தமிழ்வாணனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ''எங்கள் பகுதியில் எஸ்.டி. பிரிவினர் யாரும் இல்லை என்பதாலும் தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பதவியை மகளிர் பொதுப்பிரிவில் ஒதுக்கித் தந்து மகளிருக்கான பிரதிநிதித்துவம் கிடைத்திட ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம் என மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வோம்'' என தெரிவித்தனர்.


Next Story