உலககோப்பை கால்பந்து : ரசிகர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமில்லை - கத்தார் அரசு அறிவிப்பு
உலகக்கோப்பை போட்டியை காண ரசிகர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமில்லை என கத்தார் அரசு அறிவித்துள்ளது.
தோஹா,
22-வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன.உலக கோப்பையை நடத்தும் கத்தார், ஈகுவடார் அணிகள் நவம்பர் 20-ம் தேதி மோதுகின்றன.
இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டியை காண ரசிகர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமில்லை என கத்தார் அரசு அறிவித்துள்ளது.
ஆனால், பாதுகாப்பான சூழலை மீறுபவர்களுக்கு போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும் ,கொரோனா தொற்று பரவ தொடங்கினால், வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் பாதுகாப்பான "பயோ-பப்பில்" கட்டாயப்படுத்தப்படலாம் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் போட்டிக்காக கத்தாருக்கு வருபவர்கள் தாங்கள் விமானம் பயணம் மேற்கொள்ளும் முன் 6 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா நெகட்டிவ் என்பதை உறுதிப்படுத்த அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது