நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்கக்கோரி முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு சமூக ஆர்வலர்கள் மனு


நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்கக்கோரி முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு சமூக ஆர்வலர்கள் மனு
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்கக்கோரி முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு சமூக ஆர்வலர்கள் மனு அனுப்பினர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர், பந்தலூர் வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்கக்கோரி முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கேரளா மற்றும் கர்நாடகா எல்லையையொட்டி உள்ள கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கை ஏற்று வெளிமாநில பஸ் வழித்தடங்களில் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதன்படி ஊட்டியில் இருந்து கோழிக்கோட்டிற்கு 2 வழித்தடங்களில் தலா 4 பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பந்தலூர், கூடலூர் பகுதி மக்கள் மிகுந்த பயனடைந்தனர். கேரளாவுக்கு வேலைக்கு செல்பவர்கள், மருத்துவ வசதிக்காக செல்பவர்கள் என பலருக்கும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் கடந்த சில ஆண்டுகளாக முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த பஸ்களை இயக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கூடலூர், பந்தலூர் பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் ஊட்டி மற்றும் கோழிக்கோட்டிற்கு செல்ல கடும் அவதியடைந்து வருகின்றனர். கேரள மாநிலம் சுல்தான்பத்தேரியில் இருந்து எல்லைப் பகுதியான பாட்டவயல் பகுதிக்கு அரை மணி நேரத்திற்கு ஒரு பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பஸ்கள் இல்லாமல் பொதுமக்கள் தனியார் ஜீப்புகளில் அதிக கட்டணம் செலுத்தி வரவேண்டிய நிலை உள்ளது.

இதேபோல கூடலூர், பந்தலூர் பகுதியில் இருந்து கோவை மற்றும் ஊட்டிக்கு நேரடியாக இயக்கப்பட்ட கரியசோலை ஊட்டி, மாங்கோடு கோவை, மேபீல்டு கோவை பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் கோவைக்கு செல்பவர்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story