உள்ளாட்சி தேர்தலில்மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்கடலூரில் நடந்த சங்க மாநாட்டில் தீர்மானம்
உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கடலூரில் நடந்த சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டிசம்பர் 3 இயக்க, மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம் சார்பில் அரசியல் சமூக நீதி மாநாடு கடலூர் புதுப்பாளையத்தில் நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அமரேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பாலமுருகன் வரவேற்றார். மாநாட்டில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், சட்ட ஆலோசகர் யுவராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினரும் டிசம்பர் 3 இயக்க மாநில தலைவருமான தீபக் கலந்து கொண்டு பேசினார்.இதில் மாநில அவை தலைவர் வேலாயுதம், மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை, மாநில பொருளாளர் வரதன்பூபதி, மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன், இளைஞரணி சிவராமன் மற்றும் மாநில, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித்திட்டத்தில் வழங்கும் வேலையை 200 நாளாக உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.