சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஊட்டி,
தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளையொட்டி, கடந்த ஆண்டு முதல் சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரியார் பிறந்த நாளையொட்டி சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி உறுதிமொழியை எடுத்துக்கொள்ள, அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைப்பிடிப்பேன் என்றும், சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைத்திட என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.