சமூகநீதி பாதுகாப்பு உரிமைகள் கவுன்சில் ஆர்ப்பாட்டம்
ஓசூர்:-
ஓசூரில் சமூகநீதி பாதுகாப்பு உரிமைகள் கவுன்சில் அமைப்பின் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், மத்திய மற்றும் மணிப்பூர் மாநில பா.ஜனதா அரசுகளை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு மாநில செயல் தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார். இதில், சமூகநீதி பாதுகாப்பு உரிமைகள் கவுன்சில் நிறுவனரும், பொதுச்செயலாளருமான இளவரசன், மாநில பொருளாளர் முத்துசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் பேசினர். இதில், அமைப்பின் உண்மை அறியும் குழு அமைப்பாளர் செந்தில் குமரன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, ஐக்கிய முற்போக்கு தமிழர் கழக மாநில தலைவர் சண்முகம், ஆதவன், சாமி, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில இளைஞரணி தலைவர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.