ரோட்டில் மண் கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி


ரோட்டில் மண் கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
x

ரோட்டில் மண் கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில், திருச்சி- கோயம்புத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது, வெள்ளகோவில் வழியாக ஏராளமான சுற்றுலா வாகனங்கள், வெள்ளகோவில் பகுதியில் உள்ள நூல் மில்களுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள், மற்றும் கார், இருசக்கர வாகனங்கள், மற்றும் கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. வெள்ளகோவில் இருந்து காங்கேயம் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே ரோட்டில் மண் குவியல் குவியலாக கிடைக்கின்றன. இதனால் அந்த இடத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்புள்ளது. ஆகையால் ரோட்டில் கிடைக்கும் மண்ணை நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்த வேண்டுமாய் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story