விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை பயிற்சி


விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை பயிற்சி
x

விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை பயிற்சி

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தேசிய மண்வள மேலாண்மை இயக்க திட்டத்தின் கீழ் கெங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட மெட்டுக்கல் ஆதிவாசி கிராமத்தில் மண்வள மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்(பொறுப்பு) ஜெயந்தி பிரேம்குமார் தலைமை தாங்கினார். துணை தோட்டக்கலை அலுவலர் சந்திரன், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் அதற்கான இடுபொருட்கள் தயாரிப்பு முறைகள் குறித்து எடுத்துரைத்தார். ஊட்டி மண் ஆய்வு கூட வேளாண் அலுவலர் சாய்நாத், மண் மாதிரி சேகரிப்பு முறைகள் மற்றும் மண் ஆய்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். துணை தோட்டக்கலை அலுவலர் ஜெயக்குமார், தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் வெற்றிவேல் குமார், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கினார். இதில் ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் உள்ளிட்ட இடுபொருட்கள் தயாரிப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக உதவி தோட்டக்கலை அலுவலர் சௌமியா வரவேற்றார். பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Next Story