மண்சாலையை தார்சாலையாக அமைக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை


மண்சாலையை தார்சாலையாக அமைக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
x

மண்சாலையை தார்சாலையாக அமைக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்

குண்டடம், பிப்.14-

குண்டடம் அருகே மண்சாலையை தார்சாலையாக மாற்றி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது ;-

குண்டடம் ஒன்றியம் கொக்கம்பாளையம் ஊராட்சி குட்பட்ட கரப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்துவருகின்றனர் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் திருப்பூர் மார்க்கெட், கொடுவாய், குண்டடம் மற்றும் வெளியூர்களுக்கு செல்ல கரப்பாளையத்தில் இருந்து செல்லும் மண்சாலை வழியாக திருப்பூர் -கொடுவாய் -குண்டடம் ஆகிய சாலைகளை இணைக்கும் இந்த மண்சாலைய பயன்படுத்தி வருகின்றனர் இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு முக்கிய பிரதான சாலையாக உள்ளது இந்த மண்சாலையில் பல இடங்களில் குன்டும் குழியுமாக உள்ளதால் காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லும்போது சிலர் அவ்வப்போது கீழே விழுந்து சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவமும் அரங்கேறிவருகிறது மேலும் வெளியூர் செல்லவேண்டுமானால் சுமார் 7 கிலோமீட்டர் சுற்றி செல்லவேண்டியுள்ளது மழைகாலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு இந்த சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு முற்றிலுமாக போக்குவரத்து தடை ஏற்பட்டுவிடுகிறது இந்த மண்சாலையை தார்சாலையாக மாற்றி அமைத்தால் நேரமும் தூரமும் மிச்சமாகும் மேலும் கடந்த சிலவருடங்களுக்கு முன் மண்சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க அதிகாரிகள் வந்து அளவீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது ஆனால இதுவரை தார்சாலை அமைக்காததால் பல வருடங்களாக மிகவும அவதிப்பட்டு வருகிறோம் என இவ்வாறு கூறினார்

ஆகேவ சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு கிடப்பில் போடபட்ட இந்த மண்சாலையை தார்சாலையாக மாற்றி அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்


Reporter : R. Velusamy Location : Tirupur - Dharapuram - Kundadam


Next Story