ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு


ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
x

அணைக்கட்டு அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

அணைக்கட்டை அடுத்த பெரியஊனை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 29). ராணுவ வீரர். இவர் தனது மனைவி பிரசவத்திற்காக விடுமுறையில் வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு அணைக்கட்டு அருகே மலைச்சந்து கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். மீண்டும் மாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் அவரது மனைவியின் பள்ளிச் சான்றுகள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இது குறித்து ராணுவ வீரர் வெங்கடேசன் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story