வெள்ளிச்சந்தை அருகே ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை


வெள்ளிச்சந்தை அருகே ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளிச்சந்தை அருகே ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் ஜோஸ் (வயது42), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி அமராவதி. இவர் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு ெஜகன் ஜோஸ் மனைவியின் ஊரான வெள்ளிச்சந்தை அருகே உள்ள மணவிளையில் நிலம் வாங்கி வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

கடந்த 2 நாட்களாக கணவன் -மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெகன் ஜோஸ் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின் பக்கம் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதை பார்த்த உறவினர்கள் வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர். போலீசார் சம்பவம் இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story