ராணுவ வீரர் விபத்தில் பலி-திருமணமான ஒரு மாதத்தில் பரிதாபம்


ராணுவ வீரர் விபத்தில் பலி-திருமணமான ஒரு மாதத்தில் பரிதாபம்
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான ஒரு மாதத்தில் ராணுவ வீரர் விபத்தில் பலியானார்

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டையை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருடைய மகன் பாலசுப்பிரமணியன் (வயது 26).

இவர் குஜராத் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த மாதம் 21-ந்தேதி ராமநாதபுரத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம்-தேவிபட்டினம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பேராவூர் அருகே சென்றபோது எதிரே பொட்டகவயல் கிராமத்தை சேர்ந்த பாபு(30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். திடீரென 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.

இதில் தலையில் காயமடைந்த ராணுவ வீரர் பாலசுப்பிரமணியன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பாபுவும் காயம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராணுவ வீரர் பாலசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story