ராணுவ வீரர் திடீர் சாவு


ராணுவ வீரர் திடீர் சாவு
x

கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் திடீரென உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். அவரது மகன் கோகுல்குமார் (வயது 30), ராணுவ வீரர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல்குமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசில் கோகுல்குமாரின் மனைவி மீனா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்த கோகுல்குமாரின் மனைவி மீனா வேலூர் ஆயதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு யஷ்வந்த் (7) என்ற மகன் உள்ளார்.


Next Story