ராணுவ வீரர் மர்மச்சாவு


ராணுவ வீரர் மர்மச்சாவு
x

சோளிங்கர் அருகே ராணுவ வீரர் மர்மச்சாவு. கொலையா என போலீசார் விசாரணை.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வைலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் வினோத் குமார் (வயது 22). இவர் நாகாலாந்து பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ராணுவவீரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி ஒரு மாத விடுப்பில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் சோளிங்கர் அருகே காளிகாபுரம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கலந்து கொள்வதற்காக அவரது உறவினர் வெங்கடேசன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சொந்த ஊரான வைலாம்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் வீட்டுக்கு சென்று சேரவில்லை. சோளிங்கரை அடுத்த கொடைக்கல் பால் குளிரூட்டும் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் ஒரு பக்கமும், சற்று தொலைவில் புதரில் வினோத்குமார் பிணமாக கிடப்பதாகவும் தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கொண்டபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வினோத்குமார் விபத்தில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story