ராணுவத்தினர் தேசிய கொடி அணி வகுப்பு
ராணுவத்தினர் தேசிய கொடி அணி வகுப்பு
மதுரை
மேலூர்,
மேலூர் அருகே இடையபட்டியில் ராணுவ முகாம் உள்ளது. இங்கிருந்து இந்தோ தீபத்திய எல்லை பாதுகாப்பு படை 4-வது பட்டாலியனை சேர்ந்த 100 ராணுவ வீரர்கள் தேசிய கொடிகளை கைகளில் ஏந்திக்கொண்டு திருவாதவூர் மற்றும் பல்வேறு கிராமங்கள் வழியாக மேலூர் வந்தனர். 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகளை ஏற்றி கொண்டாட வேண்டும் என வலியுறுத்தும் வகையில் ராணுவ வீரர்கள் தேசிய கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.
Related Tags :
Next Story