ராணுவ வீரர்களின் குதிரை சாகசம்


ராணுவ வீரர்களின் குதிரை சாகசம்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வெலிங்டனில் ராணுவ வீரர்களின் குதிரை சாகசம் நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

வெலிங்டனில் ராணுவ வீரர்களின் குதிரை சாகசம் நடந்தது.

போர் பயிற்சி

இந்திய ராணுவத்தினர் போர் திறமை மட்டுமின்றி சாகச போட்டிகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அவர்களுக்கு கடுமையான போர் பயிற்சியுடன் விளையாட்டு, மலையேறுதல், குதிரை சாசகம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சிகளை ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, ராணுவ அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் பேரக்சில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் எம்.ஆர்.சி. ராணுவ முகாமும், முப்படை அதிகாரிகள் பயிற்சி பெறும் ராணுவ பயிற்சி கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள முப்படை அதிகாரிகளுக்கு குதிரை சவாரி வெலிங்டன் ஜிம்கானா மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று ஜிம்கானா மைதானத்தில் மவுண்டன் ஜிம்கானா என்ற பெயரில் குதிரை சாகசம் நடைபெற்றது.

அசத்திய வீரர்கள்

முதல் முறையாக 6 பெண் வீராங்கனைகளும், 50-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டு குதிரை சாகசத்தில் ஈடுபட்டனர். இதில் குதிரைக்கான ஓட்டப்பந்தயம், ஆசர்லே, 4 ஜம்பிங், ஷோ ஜம்பிங், டிரிக் ஜம்பிங், பால் அண்ட் பக்கெட் ரேஸ் உள்பட பல்வேறு பிரிவுகளில் நடந்த சாகசத்தில் வீரர், வீராங்கனைகள் அசத்தினார்கள்.

குதிரைகள் மீது ராணுவ வீரர்கள் அமர்ந்து சாகசத்தின் போது, துள்ளி குதித்து போட்டி போட்டுக்கொண்டு சீறி பாய்ந்து தடைகளை தாண்டி குதித்து சென்றது பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் சாகசத்தின் போது நெருப்பு வளையம் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது பாய்ந்து குதிரைகள் அசத்தின. குதிரையில் இருந்தவாறு ஈட்டி எறியும் போட்டியும் நடத்தப்பட்டது. குதிரை சாகசம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீரங்கனைக்கு கேடயம் வழங்கப்பட்டது.


Next Story