ராஜபாளையம் நகராட்சியில் திடக்கழிவு விழிப்புணர்வு


ராஜபாளையம் நகராட்சியில் திடக்கழிவு விழிப்புணர்வு
x

ராஜபாளையம் நகராட்சியில் திடக்கழிவு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆணையர் பார்த்தசாரதி கூறினார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சியில் திடக்கழிவு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆணையர் பார்த்தசாரதி கூறினார்.

விழிப்புணர்வு பிரசாரம்

ராஜபாளையம் நகராட்சியின் சார்பில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான திடக்கழிவுகளை பிரித்து அளித்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை பிரித்து அவை எளிதில் மக்கக்கூடிய தன்மையுள்ள ஈரமான கழிவுகளை பச்சை நிறத்தொட்டியிலும், மக்காத உலர்ந்த கழிவுகளை நீல நிறத்தொட்டியிலும் பொதுமக்கள் அனைவரும் பிரித்து வழங்க வேண்டி நகர் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி கூறியதாவது:-

தூய்மையின் இரு வண்ணங்களான ஈரமான பச்சை, உலர் நீலம், நகரில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திடக்கழிவுகளை பிரித்து வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றின் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

கலைப்பொருட்கள்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தூய்மை குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முறையாக பச்சை, நீல வண்ண குப்பைத்தொட்டிகளில் கழிவுகளை பிரித்துக்கொடுத்தல் குறித்து செயல்முறை விளக்கங்கள் பள்ளி மாணவ,மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் அளிக்கப்பட்டது. கழிவுகளில் இருந்து அழகான சிறந்த பொம்மைகள் தயாரிக்க பயன்பாட்டுப் பொருட்கள், தோரணங்கள் மற்றும் இதர பொருள்கள் குறித்த பள்ளி மாணவர்கள் பங்குபெறும் இந்திய அளவிலான இயக்கத்தின் கீழ் நகரில் உள்ள அனைத்து 34 பள்ளிகளிலும் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டு கலைப்படைப்புகளை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதுவரை 15 பள்ளிகள் இந்த இயக்கத்தில் பங்கேற்று பல்வேறு கலைப்பொருட்களை தயாரித்து வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மாசில்லா தீபாவளி

திடக்கழிவுகளை பிரித்து வழங்குதல் மற்றும் தூய்மை தீபாவளி மற்றும் பிளாஸ்டிக் மாசில்லா தீபாவளி பின்பற்றுதல் குறித்து பொது மக்களுக்கு கலை நிகழ்ச்சிகளை நடத்தி தெருக்களில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story