திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்ய வேண்டும்
மயிலாடுதுறை நகரில் திடக்கழிவுகள் மறுசுழற்சி செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) டாக்டர் லட்சுமிநாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை நகரில் திடக்கழிவுகள் மறுசுழற்சி செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) டாக்டர் லட்சுமிநாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
100 கிலோ..
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவுக்கு அதிகமான அளவுள்ள திடக்கழிவுகள் உருவாக்கக்கூடிய கட்டிடங்களை பயன்படுத்தும் மத்திய மற்றும் மாநில அரசுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், மருத்துவ சிகிச்சை நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், இதர கல்வி நிலையங்கள்.
மாணவர் விடுதிகள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத்தலங்கள், விளையாட்டு அரங்குகள், விளையாட்டு வளாகங்கள், துணி விற்பனையகங்கள், உணவு விடுதிகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் சந்தை ஒப்பந்தம் எடுத்தோர் அதிக கழிவுகளை உருவாக்குபவர்கள் என தகுதியுடையோர் ஆவர்.
மறுசுழற்சி
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 விதி 3(8)-ன்படி நாள் ஒன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் கழிவுகள் உற்பத்தி விகிதத்தை கொண்டிருக்கிற மேற்குறிப்பிட்டவர்கள், நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று, பதிவு செய்து தங்கள் வளாகத்திற்குள் உருவாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். தவறும்பட்சத்தில் மொத்த கழிவு உருவாகும் தங்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.