பாதையில் தடுப்பு அமைத்து தகராறு
பாதையில் தடுப்பு அமைத்து தகராறு
திருப்பூர்
அவினாசி
அவினாசி அருகே லூர்துபுரத்தை சேர்ந்த பெர்னான்ட் மேரி (வயது 50) என்ற பெண் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடலை சுடுகாட்டிற்கு , வழக்கமான வழித்தடத்தில் எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது தனிநபர் சிலர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறி தடுப்புகள் வைத்து மறைத்தனர். இதனால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கல்வீசியதில் மலையப்பன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இரவு 9 மணியளவில் வழக்கமாக செல்லும் வழித் தடத்தில் உடலை எடுத்துச் சென்றனர்.
Related Tags :
Next Story