சாதி ரீதியாக துன்புறுத்தி பணி செய்ய விடாமல் தடுப்பதாக உடுமலை ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டார்.
சாதி ரீதியாக துன்புறுத்தி பணி செய்ய விடாமல் தடுப்பதாக உடுமலை ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டார்.
திருப்பூர்,
சாதி ரீதியாக துன்புறுத்தி பணி செய்ய விடாமல் தடுப்பதாக உடுமலை ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டார்.
சாதி ரீதியாக துன்புறுத்தல்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உடுமலை ஊராட்சி ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவன் என்பதால் ஒரு சிலர் சுயநலத்துக்காக என்னை அவர்களின் விருப்பப்படி பயன்படுத்த வலியுறுத்தி மிரட்டி, ஜாதி வேறுபாடுகளுடன் துன்புறுத்தி என்னை பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார்கள். என் மீதும், ஊராட்சி துணை தலைவர் மீதும் வேண்டும் என்றே வீண்பழி சுமத்தி ஊராட்சியில் முறைகேடுகள், லஞ்சம், வரி ஏய்ப்பு, குடிநீர் இணைப்பு ஊழல் நடந்ததாக புகார் அளித்து வருகிறார்கள். ஊராட்சி உறுப்பினர்கள் 3 பேர் எங்கள் மீது வீண்பழி சுமத்தி வருகிறார்கள்.
பணி செய்யவிடாமல் தடுக்கிறார்கள்
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் தேவையில்லாமல் பிரச்சினை செய்து வாக்குவாதம் செய்தனர். எனனை தாக்கி எனது லெட்டர் பேடை பிடுங்கி என்னை மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள். அதில் உண்மைக்கு புறம்பான வாசகங்களை எழுதி சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர். சாதி அடிப்படையில் என்னை துன்புறுத்தி வருகிறார்கள்.
தலைவர் பணியை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். ஊராட்சியில் எந்த பணி செய்தாலும் அவர்களின் அனுமதி பெற்று செய்யும்படி கூறுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மக்கள் பணியை செய்ய உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.