சோனியா காந்தி பிறந்த நாள் விழா


சோனியா காந்தி பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பழனிநாடார் தலைமை தாங்கி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மாவட்ட பொருளாளர் முரளிராஜா, சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், மாநில இலக்கிய அணி செயலாளர் பொன்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இலக்கிய அணி தலைவர் பால்துரை வரவேற்றார்.

நிகழ்ச்சியில் இலக்கிய அணி துணைத்தலைவர் ஆலடி சங்கரையா, வட்டார தலைவர் தங்கரத்தினம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, கீழப்பாவூர் நகர தலைவர் சிங்ககுட்டி (எ) குமரேசன், சுரண்டை ஜெயபால், மேகநாதன், பரமசிவன், தாமரைச்செல்வன், செல்லப்பா, ஒன்றிய கவுன்சிலர் மேரிமாதவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜேசுஜெகன் நன்றி கூறினார்.


Next Story