சோனியா காந்தியின் 76-வது பிறந்தநாள்: தமிழக காங்கிரசார் உற்சாக கொண்டாட்டம்


சோனியா காந்தியின் 76-வது பிறந்தநாள்: தமிழக காங்கிரசார் உற்சாக கொண்டாட்டம்
x

சோனியா காந்தியின் 76-வது பிறந்தநாள்: தமிழக காங்கிரசார் உற்சாக கொண்டாட்டம்.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியின் 76-வது பிறந்த நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி கொடி வண்ணத்தில் 76 கிலோ எடையுள்ள ராட்சத 'கேக்' வெட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, பி.வி.தமிழ்செல்வன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சோனியாகாந்தி பிறந்தநாளையொட்டி, கீழ்ப்பாக்கம் டி.பி.சத்திரத்தில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு, சு.திருநாவுக்கரசர் எம்.பி. இனிப்புகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். அப்போது மேற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதேபோல, சென்னை மாநகராட்சி 126-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அமிர்தா வர்ஷினி ஏற்பாட்டில், சாந்தோம் கவுன்சிலர் அலுவலகத்தில் 200 ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் சோனியா காந்தி முகமூடி அணிந்திருந்தனர். இந்த நிகழ்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ரவிந்திரதாஸ், மயிலை தரணி, மயிலை அசோக் பாபு, பகுதி தலைவர் ரகுசந்தர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதும் காங்கிரசார் சோனியா காந்தியின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்கள்.


Next Story