எண்கண் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்


எண்கண் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே எண்கண் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி அருகே எண்கண் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

எண்கண் முருகன் கோவில்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே எண்கண் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற சுப்பிரமணியசுவாமி (முருகன்) கோவில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது.

இதை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்துடன் ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா வந்து, சூரனை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்ச்சியை காண திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் வந்து இருந்தனர். இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வலங்கைமான்

வலங்கைமான் தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரன் கோவிலில், நேற்று சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் சுப்பிரமணியர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்தார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வலங்கைமான் கைலாசநாதர் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.

திருமக்கோட்டை

திருமக்கோட்டையில் உள்ள வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் 6-ம் நாளையொட்டி நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதேபோல் ஞானபுரீஸ்வரர் கோவிலில் நடந்த கந்தசஷ்டி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story