ஆதாரங்கள் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு: மருத்துவ காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளது- மதுரையில் வைகோ பேட்டி

ஆதாரங்கள் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு: மருத்துவ காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளது- மதுரையில் வைகோ பேட்டி
x

ஆதாரங்கள் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு: மருத்துவ காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளது- மதுரையில் வைகோ பேட்டி

மதுரை

அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி, மதுரை வலையங்குளம் பகுதியில் வருகிற 15-ந்தேதி ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறும் இடத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று ஆய்வு செய்தார்.

முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், "மத்திய தணிக்கை குழு அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளபடி, மருத்துவ காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளது. ஆதாரங்கள், அடிப்படை காரணங்கள் இல்லாமல் எதையும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கமாட்டார். இந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதால்தான் கூறியிருப்பார்" என்று கூறினார். அப்போது, ம.தி.மு.க. எம்.எல்.ஏ. பூமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story