தென்னிந்திய அளவிலான கபடி போட்டி


தென்னிந்திய அளவிலான கபடி போட்டி
x

குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி 4 நாட்கள் நடக்கிறது. இதில் 750 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

வேலூர்

கபடி போட்டி

குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் 4 நாட்கள் நடைபெறுகிறது. முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50,000 உள்ளிட்ட பல்வேறு ரொக்க பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்படுகிறது.

கபடி போட்டியில் தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த அணிகளான ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரித்துறை, திருச்சி தமிழ்நாடு போலீஸ், சென்னை சிட்டி போலீஸ், ஐதராபாத் ஆர்.டி.ஐ., பெங்களூரு மெட்ராஸ் என்ஜினியரிங் குரூப்ஸ் ராணுவ அணி, ஜே. கே.அகாடமி கேரளா, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட அணிகளும், பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம், அந்தியூர் சக்தி பிரதர்ஸ், பெங்களூரு நேஷனல் ஸ்போர்ட்ஸ், சென்னை பிரண்ட்ஸ் உள்பட 25-க்கும் மேற்பட்ட அணிகள் என மொத்தம் 750-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கலந்து கொள்ளும் இந்த அணிகளில், புரோ கபடி லீக்கில் விளையாடிய வீரர்கள், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.

தொடக்க விழா

கபடி போட்டிகள் தொடக்க விழா நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் கள்ளூர்ரவி, நத்தம்பிரதீஷ், அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும், விழா குழுவினரும் செய்து வருகின்றனர்.


Next Story