தெற்கு வீரபாண்டியபுரம் யூனியன் பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு


தெற்கு வீரபாண்டியபுரம்  யூனியன் பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு வீரபாண்டியபுரம் யூனியன் பள்ளியில் சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு நடத்தினார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

தெற்கு வீரபாண்டியபுரம் யூனியன் நடுநிலைப்பள்ளியில் சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அங்கு பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்களை சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

பள்ளியில் ஆய்வு

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் யூனியன் நடுநிலைப்பள்ளிக்கு எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவ மாணவியருக்கு குடிநீர் வசதி இருக்கிறதா? சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார்.

மேலும், பள்ளி கட்டடங்களின் தரம் குறித்தும், பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்களை ஆய்வு செய்த அவர், அந்த கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆய்வின்போது, யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் மேற்பார்வையாளர் பரமசிவன், வட்டார கல்வி அலுவலர்கள் பவணந்திஸ்வரன், மகாலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியை இமாக்குலேட், தெற்குவீரபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவர் மாரியம்மாள் சுப்பையா, துணைத் தலைவர் சண்முகராஜ் உட்பட அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.

புதியம்புத்தூர்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் பஸ் நிலையம் அருகே உள்ள சுடலைமணிநாடார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் ராம்குமார், முத்துராஜ் ஆகியோர் முன்னில வைத்தனர். உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்திலி சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ, மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு மின் நுகர்வோரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

கூட்டத்தில் மின்வாரிய மக்கள் தொடர்பு அலுவலர் ஆறுமுகம், உதவி செய்ய பொறியாளர்கள் ஜெயக்குமார், முனியசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் வேலாயுதசாமி, இளையராஜா, சின்னத்துரை, உதவி பொறியாளர்கள் மணிசேகர், செந்தில்ராஜ், பால்முனியசாமி, ஜெயசுதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி உட்பட பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story