தென் மண்டல டி.ஐ.ஜி. தேசிய கொடி ஏற்றினார்


தென் மண்டல டி.ஐ.ஜி. தேசிய கொடி ஏற்றினார்
x

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் தென் மண்டல டி.ஐ.ஜி. தேசிய கொடி ஏற்றினார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் நேற்று குடியரசுதினவிழா நடந்தது. இதில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் தென் மண்டல டி.ஐ.ஜி. மனோஜ் யாதவ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, வீரர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.

பின்னர், பேரிடர் காலங்கங்களில் மீட்பு பணிகளின் போது உதவி புரியும் மோப்ப நாய் படை பிரியினையும் பார்வையிட்டார். தொடர்ந்து பேரிடர் மீட்புப் படை வளாகத்தில் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி பெற்று வரும் நேரு யுவ கேந்திரா தன்னார்வலர்களுடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேரிடர் மீட்புப் படையின் கமாண்டன்ட் அருண் மற்றும் அலுவலர்கள், வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.


Next Story