தென் மண்டல அளவிலான கபடி போட்டி


தென் மண்டல அளவிலான கபடி போட்டி
x

சிவகாசியில் தென் மண்டல அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் தென்மண்டல அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் 4 பிரிவுகளாக நடத்தப்பட்டது. பள்ளியின் தலைவர் வெங்கடேஷ்பிரசாத் வரவேற்றார். பள்ளியின் தலைமை முதல்வர் கபடி விளையாட்டின் சிறப்பு குறித்து பேசினார். போட்டிகளை பள்ளியின் தாளாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதில் ராம்கோ வித்யாலயா, சிவகாசி ஏ.ஏ.ஏ., ஸ்ரீரமணா அகாடமி, மகரிஷி வித்யா மந்திர் ஆகிய பள்ளிகள் முதல் பரிசுகளை பெற்றன. சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் தனி தாசில்தார் ஸ்ரீதர், சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர் ராஜேஷ், ஹரிசங்கர், பள்ளியின் முதல்வர் அம்பிகாதேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் துணை முதல்வர்கள் ஞானபுஷ்பம், சுதா மற்றும் ஆசிரியர்கள், பள்ளியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.



Next Story