தென் மாவட்ட ஐவர் கால்பந்து போட்டி -மதுரை அணிக்கு சாம்பியன் பட்டம்


தென் மாவட்ட ஐவர் கால்பந்து போட்டி -மதுரை அணிக்கு சாம்பியன் பட்டம்
x

தென் மாவட்ட ஐவர் கால்பந்து போட்டி மதுரை அணிக்கு சாம்பியன் பட்டம் பெற்றது

மதுரை


மதுரை மாவட்டம் திருநகரில் 15-வயதிற்கு உட்பட்டோர்களுக்கான தென் மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் தென் மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. இதில் மதுரை ரிசர்வ் லைன் கிளப் அணி (ஆர்.எல்.எப்.ஏ.) முதல் ஆட்டத்தில் திருமங்கலம் அணியுடன் மோதியதில் 7-1 கோல் கணக்கில் வென்றது. பின்னர் கால் இறுதி போட்டியில் திண்டுக்கல் அணியினருடன் மோதியதில் 1-0 என்ற கணக்கிலும், அரையிறுதி போட்டியில் ஏ.சி.எம்.இ. அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. விறுவிறுப்பாக நடந்த இறுதி போட்டியில் ஆர்.எல்.எப்.ஏ. அணி, ஏ.சி.எம்.இ.அணியுடன் மோதி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற மதுரை ரிசர்வ் லைன் கிளப் அணி (ஆர்.எல்.எப்.ஏ.) அணியை தலைமை பயிற்சியாளர் சுந்தரராஜா மற்றும் பலர் பாராட்டி பரிசு வழங்கினர்.


Next Story