காட்பாடி ெரயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு


காட்பாடி ெரயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு
x

காட்பாடி ெரயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்

காட்பாடி ரெயில் நிலையத்தில் சென்னை மார்க்கமாகவும் ஜோலார்பேட்டை மார்க்கமாகவும், தினந்தோறும் ஏராளமான ரெயில்கள் செல்கின்றன. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா நேற்று ஆய்வு ரெயில் பெட்டியில் சென்னை சென்ட்ரலில் இருந்து அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், வாலாஜா ஆகிய ெரயில் நிலையங்களை ஆய்வு செய்து விட்டு காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

அவர் காட்பாடி ரெயில் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். காட்பாடி ரெயில் நிலைய வளாகம், நடைமேடைகள் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் ரெயில் நிலைய வளாகத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வுக்கு பின்னர் அவர் ஜோலார்பேட்டைக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story