தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு


தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
x

தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு

மயிலாடுதுறை

சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ெரயில்வே நிலையத்திற்கு நேற்று தென்னக ெரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ்அகர்வால் வந்தார். அப்போது ெரயில்வே நிலைய கட்டிடங்கள், டிக்கெட் வழங்கும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது அவரிடம், கொரோனா காலங்களில் நின்று சென்ற ெரயில்கள் மீண்டும் நின்று செல்ல வேண்டும். சீர்காழி ெரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து வரும்போது சிதம்பரம் அல்லது மயிலாடுதுறையில் இறங்கி சீர்காழி வரும் சூழ்நிலை உள்ளது. எனவே சீர்காழியில் இரண்டு மார்க்கமாக செல்லும் ெரயில்கள் நின்று செல்ல வேண்டும் என பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் வணிகர் சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Related Tags :
Next Story