தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
கும்பகோணம் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழகத்திலேயே முக்கியமான ரெயில் நிலையம் கும்பகோணம் என கூறினார்.
ஆய்வு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ெரயில் நிலையத்தை அதிநவீன பொலிவுறு ெரயில் நிலையமாக மாற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு தென்னக ெரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் தலைமையில் கும்பகோணம் ெரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், சண்முகம், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், அன்பழகன் எம்.எல்.ஏ., கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன், அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் சோழா.கேந்திரன், செயலாளர் சத்தியநாராயணன், தஞ்சை மாவட்ட ெரயில் உபயோகிப்பாளர் சங்கசெயலாளர்கிரி, துணைச்செயலாளர் பாபநாசம் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பரிந்துரை செய்யப்படும்
பின்னர் திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:-
ெரயில்வே வாரியம் அறிவித்துள்ள ெரயில்வே மேம்பாட்டுப்பணிகளை கும்பகோணம் ெரயில் நிலையத்தில் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்வதற்காக எனது தலைமையிலான குழுவினர் கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் இந்த திட்டம் குறித்த ஆய்வு இன்று நடைபெற உள்ளது.
இதில் இங்கு மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள், தேவையான வசதிகள் போன்றவற்றை ஆய்வு செய்து ெரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்படும். இரட்டை ெரயில் பாதை பற்றி தற்போது ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.
தமிழகத்திலேயே முக்கியமான ரெயில் நிலையம்
கும்பகோணம் ெரயில் நிலையத்திற்கு தேவையான மேம்பாட்டு பணிகள் மட்டும் ஆலோசிக்கப்படும். தமிழகத்திலேயே முக்கியமான ெரயில் நிலையம் கும்பகோணம். இதை மேம்பாடு செய்வது அவசியமான ஒன்று.
ெரயில்வே வாரியம் கூறியுள்ள வழிகாட்டுதலின்படி ெரயில் நிலையத்திற்கு செய்ய வேண்டிய வசதிகள், மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து தேவையான வசதிகளை மேம்பாடு செய்வதற்காக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது ஒரு நீண்ட கால திட்டம். எனவே இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
கூடுதல் ரெயில் சேவை
இதன்படி 40 அல்லது 50 ஆண்டு காலத்திற்கு பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கு ஏற்ற வகையில் ஆய்வு மேற்கொண்டு அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்படும். கொரோனா ஊரடங்குக்கு பிறகு மெயின் லைனில் அனைத்து ரெயில்களும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு தேவைப்பட்டால் கூடுதல் ெரயில் சேவை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மக்கள் பிரதிநிதிகள், ெரயில் பயணிகள் சங்கத்தினர், அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு உள்ளிட்டவர்களுடன் கும்பகோணம் ெரயில் நிலைய மேம்பாடு குறித்து மணீஷ் அகர்வால் ஆலோசனை நடத்தினார்.