தென்மண்டல ஆலோசனை கூட்டம்


தென்மண்டல ஆலோசனை கூட்டம்
x

தென்மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் சூலக்கரையில் உள்ள தனியார் திருமண அரங்கில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் தென்மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் குப்புசாமி, தனராஜ் பாண்டியன், முத்துப்பாண்டியன், சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில் ஏற்கனவே தொலைவில் உள்ள இடங்களில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களை அருகாமையில் உள்ள இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பணியிடமாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கருணை அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story