தெற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சாத்தான்குளத்தில் தெற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்க வேண்டும், சாத்தான்குளத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் அந்தோணிசுரேஷ், பொருளாளர் எடிசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story