நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: 24 மணி நேரமும் கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் -அதிகாரிகள் தகவல்


நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்:  24 மணி நேரமும் கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் -அதிகாரிகள் தகவல்
x

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. அதனால் 24 மணி நேரமும் கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. அதனால் 24 மணி நேரமும் கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டம் உள்பட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான கூட்டம் ஊட்டி தமிழகம் மாளிகையில் நடந்தது.

இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்கிற காரணத்தினால் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 18 சதவீதம் கூடுதலாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

456 மையங்கள்

நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகள் பேரிடர் அபாயமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளுக்கு 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும்.

மேலும் 6 வட்டங்களுக்கு துணை கலெக்டர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கனமழை காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 16 வீடுகள் சற்று சேதமடைந்துள்ளன. அந்த 16 குடும்பங்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.65,600-க்கான நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையின் போது அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த முகாம்களில் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள், மின்வசதி உள்பட அடிப்படை வசதிகள் சரியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கால்வாய்கள் தூர்வாரப்படும்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரிடப்பட்டுள்ளது. சாலைகளில் மரம் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. இவ்வாறு அவா்கள் கூறினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம், ஊட்டி, ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஆர்.டி.ஓ. துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story