ஒரே நாளில் 10 ஆயிரம் விதை பந்துகள் விதைப்பு


ஒரே நாளில் 10 ஆயிரம் விதை பந்துகள் விதைப்பு
x

ஒரே நாளில் 10 ஆயிரம் விதை பந்துகள் விதைப்பு

ராமநாதபுரம்

கீழக்கரை

கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த முகமது பாசித் கோவையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணி புரிந்து வரும் அவர் பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது அவர் செய்த ஒரு செயல்பாடு உலக சாதனையாக பதிவிடப்பட்டுள்ளது. முகமது பாசித் மற்றும் அவரது நண்பர் கிஷோர் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சுமார் 600 கி.மீ., தூரம் பயணம் செய்து ஒரே நாளில் தென் மாநிலங்களில் 10 ஆயிரம் விதை பந்துகள் விதைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இந்த செயல்பாடு காலை 5 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2 மணி அளவில் நிறைவடைந்தது. இந்த சாதனை கலாம்ஸ் வேர்ல்ட் ரெக்கார்டில் புதிய உலக சாதனையாக அறிவிக்கப்பட்டது. சாதனையாளர்களுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story