பனை விதைகள் விதைக்கும் பணி
நாசரேத் அருகே பனை விதைகள் விதைக்கும் பணி நடந்தது.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை தேரியை ஒட்டிய சாலை ஓரங்களில் மதர் சமூக சேவை அமைப்பின் சார்பில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எஸ்.ஜே.கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பனை விதை விதைக்கும் பணியை தொடங்கி வைத்தார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.பானுமதி, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும், தூத்துக்குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதர் இளம் பனைப்பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் முத்துமாரி வரவேற்றார்.
காயல்பட்டினம் பகுதி நகர தலைவர் முத்துக்குமார், ஏரல் பகுதி தலைவர் சங்கர் கணேஷ், திருச்செந்தூர் பகுதி நகர தலைவர் கண்ணன், மற்றும் தன்னார்வலர்கள், சமூக ஆவலர்கள், பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து பனை விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர். முடிவில் மதர் கதலி பனை பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெனிஷா நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.